ஆந்திர பிரதேசம்: மாநில முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டி ஆந்திர பிரதேச மாநிலம் உருவான நாளான இன்று(நவ.1) தனது அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆந்திர மக்களுக்காக தியாகம் செய்த ‘அமரஜீவி’ பொட்டி ஸ்ரீராமலூவிற்கு மரியாதை செலுத்தினார்.
மேலும், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆந்திர பிரதேசம் உருவான நாளில் நாம் நமது கலாசாரம், பெருமை, இம்மண்ணில் பிறந்த நம் முன்னோர்களின் போராட்டங்கள், தியாகங்கள் போன்றவற்றை நினைவுகூற வேண்டும். தியாகி ’அமர ஜீவி’ பொட்டி ஸ்ரீராமலூவை நினைவுகூறுவதன் மூலம் நம் மாநில வளர்ச்சிக்காக நம்மை நாமே மீண்டும் அர்ப்பணிப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆந்திர பிரதேசம் உருவான நாளான இன்று அம்மாநில மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தன்னுடைய சிறந்த கலாசாரத்திற்காகவும், நல்ல மனம் படைத்த மக்களுக்காகவும் புகழ்பெற்ற மாநில ஆந்திர பிரதேசம். அம்மாநிலம் மென்மேலும் வளர பிராத்திக்கிறேன்” எனப் பதிவிட்டார்.
ஆந்திர பிரதேசத்தின் ஆளுநர் பிஸ்வ பூஷன் ஹரிச்சந்திரா மாநில மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், இந்த நாளில், ஆந்திர மாநிலம் உருவாவதற்காக தியாகம் செய்த தியாகி ‘அமரஜீவி’ பொட்டி ஸ்ரீராமலூவை அனைவரும் நினைவுகூற வேண்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மோர்பி பாலம் விபத்து எதிரொலி ; அடல் பாலத்தில் குறைக்கப்பட்ட மக்கள் அனுமதி