டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா உள்ளார். இவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 26ஆம் தேதி நிறைவடைகிறது. தனது பதவி காலத்தை நிறைவு செய்யும் தலைமை நீதிபதி, அடுத்து வரப்போகும் தலைமை நீதிபதியின் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது வழக்கம்.
அந்த வகையில், என்.வி. ரமணாவிடம் பரிந்துரை கேட்டு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதியது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள டி.ஒய்.சந்திரசூட், உதய் உமேஷ் லலித் பெயர்கள் பேசப்பட்டன.
இந்த நிலையில் இன்று (ஆக 4) உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை நியமிக்க என்வி ரமணா மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இவரது பதவிக்காலமும் நவம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து டி.ஒய்.சந்திரசூட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார் என தெரிகிறது.
இதையும் படிங்க: அமலாக்கத்துறையின் அதிகாரங்களை உறுதிசெய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆபத்தானது - 17 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை!