ETV Bharat / bharat

புதுச்சேரியில் அரசு ஊழியர் வெட்டிக்கொலை

புதுச்சேரியில் முன்னாள் கவுன்சிலர் கொலைக்கு பழிக்குப் பழியாக அரசு ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு ஊழியர் வெட்டிக் கொலை
புதுச்சேரி
author img

By

Published : Oct 15, 2021, 5:42 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். கோரிமேடு அருகே தமிழக பகுதியான திருநகரில் வாட்டர் டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

முன்விரோதம்

ஆயுத பூஜையையொட்டி நேற்றிரவு திருநகர் வாட்டர் டேங்கில் பூஜை செய்ய சென்ற போது, அங்கு வந்த ஒரு கும்பல் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மணிவண்ணன் வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.

இதுகுறித்து தகவலறிந்த ஆரோவில் போலீசார், மணிவண்ணன் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட  மணிகண்டன்
புதுச்சேரி

பழிக்குப்பழி

முதல்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் முன்னாள் கவுன்சிலர் மாந்தோப்பு சுந்தர் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், மணிவண்ணனின் மகன் வினோத், சுந்தர் ஆகியோர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தனர்.

அவர்கள் இருவரையும் பழிக்குப்பழியாக கொலை செய்ய எதிரிகள் நோட்டமிட்டு வந்ததாகவும், இதனை அறிந்த இருவரும் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால் அவரது தந்தை மணிகண்டனை அக்கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: மாணவி அனுப்பிய கடிதம்; போன் அடித்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.