அமராவதி: ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின் பேரில், அம்மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் டிக்கெட் விலையை பலகைகளில் ஒட்ட வேண்டும், உணவகங்களிலும் நியாயவிலையை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதனால், திரையரங்க உரிமையாளர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து அவர்கள் தரப்பில், ஊரடங்கால் மூடப்பட்ட திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு சில மாதங்களே ஆகின்றன. பணியாளர்களுக்கு ஊதியம், பராமரிப்பு, மின்சாரம் உள்ளிட்ட செலவுகளுக்கு மத்தியில், மிகப்பெரிய நடிகர்களின் படங்களில் கூட லாபம் பெறமுடியவில்லை.
இந்த நிலையில் அரசு புதிய விதிமுறைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதன்காரணமாக, கோதாவரியில் உள்ள 50க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டது. இந்த புதிய விதிமுறைக்கு திரைப்பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தியேட்டர்கள் மூடல்?