காத்மாண்டு: சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வெய் ஃபென்கி நேபாளத்துக்கு இரண்டு நாள்கள் பயணமாக நவம்பர் 29ஆம் தேதி செல்கிறார். இருப்பினும் இந்தப் பயணத்தை சீனா, நேபாளம் உள்ளிட்ட நாடுகள் உறுதிசெய்யவில்லை.
இருப்பினும் காத்மாண்டின் செய்தி சேனல்கள் இதுதொடர்பாக தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இந்தியா தனது உயர் அலுவலரை நேபாளத்துக்கு அனுப்பி இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இதை எதிர்கொள்ளும் வகையில் சீனப் பயணம் ஏற்கனவே திட்டமிட்டுவிட்டதாக அந்தத் தகவல்கள் கூறுகின்றன. கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்தச் சுற்றுப்பயணத்துக்கு பிறகு நேபாளம் செல்லும் சீன உயர் அலுவலர் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெய் ஃபென்கி ஆவார். வெய் ஃபென்கி பயணம் சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏற்கனவே நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் சீன தூதர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், “இந்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா தனது இருநாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வேளையில், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் ஃபென்கி நவம்பர் 29ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை அங்கு தொடங்குகிறார்” என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் 1300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு ஆலயம் கண்டுபிடிப்பு!