ETV Bharat / bharat

இயல்பான வர்த்தக சூழலை மீட்டெடுக்க இந்தியாவுக்கு சீனா வலியுறுத்தல்!

author img

By

Published : Nov 25, 2020, 2:17 PM IST

டெல்லி: சீனா உள்பட அனைத்து நாடுகளும் பங்கேற்கும் வகையிலான பாகுபாடற்ற, நியாயமான, நடுநிலைமையான வர்த்தக சூழலை மீட்டெடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சீனா
சீனா

மத்திய அரசு, 43 மொபைல் செயலிகளை தடை செய்யும் புதிய அறிவிப்பை நேற்று வெளியிட்டது. இதையடுத்து அலிபாபா, டென்சென்ட், விசாட் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டன. தகவல் தொழில்நுட்ப சட்டம் 69 ஏவின் கீழ் இந்தத் தடையானது அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இயல்பான வர்த்தக சூழலை இந்தியா மீட்டெடுக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து டெல்லயில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அச்சுறுத்தல்களை காட்டிலும், பரஸ்பர வளர்ச்சிக்கு இரு நாடுகளும் வாய்ப்புகளை அளித்துள்ளன. இரு நாடுகளின் நலனுக்காக இந்திய-சீன பொருளாதார, வர்த்தக நல்லுறவை மீண்டும் சரியான பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். இதனை பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மேற்கொள்ளலாம்.

தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன செயலிகளை தடை செய்வதை சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காதவாறு சர்வதேச விதிகளையும் வழிமுறைகளையும் வெளிநாட்டில் உள்ள சீன நிறுவனங்கள் மதித்து நடக்க வேண்டும். சீனா உள்பட அனைத்து நாடுகளும் பங்கேற்கும் வகையிலான பாகுபாடற்ற, நியாயமான, நடுநிலைமையான வர்த்தக சூழலை மீட்டெடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு எதிராக இந்தியா செயல்படாது என நம்புகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது அமைதி உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தத் தடை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த ஜூன், செப்டம்பர் மாதத்தில் டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. லடாக்கில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அந்நாட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.