குழந்தை திருமண விவகாரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து யுனிசெப் அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்றைய சூழலில் 65 கோடி பேர் குழந்தை திருமணத்திற்கு ஆளாக்கப்பட்டு வாழ்ந்துவருகின்றனர் எனவும் அதில் பாதிப்பேர் இந்தியா, வங்கதேசம், பிரேசில், எத்தியோபியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் வசிப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
குழந்தை திருமணத்தை இந்தியாவில் கட்டுக்குள் கொண்டுவர தொடர் முயற்சி நடைபெற்றுவந்தாலும், உலகின் மூன்றில் ஒரு குழந்தை திருமணம் செய்துகொண்ட பெண்கள் இந்தியாவில்தான் உள்ளனர் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் குழந்தைத் திருமணம் பாதியாக குறைந்துள்ளது என்பதையும், கிராமப்புறங்களிலும் ஏழை மக்களிடம் இந்தச் சிக்கல் தொடர்ந்து நீடித்து வருவதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்காவின் உயரிய விருதிற்கு மிட்செல் ஒபாமா உட்பட 9 பெண்கள் தேர்வு!