ETV Bharat / bharat

உ.பி - 150 அடி ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம்!

author img

By

Published : Jun 14, 2021, 6:18 PM IST

ஆக்ரா அருகே கிராமப்புறப் பகுதியான ஃபதேஹாபாத் மாவட்டத்தில், 150 ஆடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த நான்கு வயது குழந்தையை மீட்கும் பணியில் தீயணைப்பு, காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

150 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை

ஆக்ரா: உத்தரப்பிரதேசம் மாநிலம், தரியாய் கிராமத்தில், திங்கள்கிழமை(ஜூன்.14) விளையாடி கொண்டிருந்த நான்கு வயது குழந்தை திடீரென அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றின் ஆழம் 150 அடியாகும். ஆக்ரா அருகே கிராமப்புறப்பகுதியான ஃபதேஹாபாத்தில் உள்ள நிபோஹாரா காவல் நிலைய பகுதியில், காலை 8.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உள்ளூர் காவல்துறை, தீயணைப்பு அலுவலர்கள் 150 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறை அலுவலர் சூரஜ் பிரசாத் கூறுகையில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையின் அசைவு கண்டறியப்பட்டுள்ளது. குழந்தை விழுந்தது தொடர்பான தகவல் கிடைத்தது முதல் மீட்பு பணி நடைபெற்றுவருகிறது என்றார்.

குழந்தை விழுந்த ஆழ்துளை கிணறு!

ஆழ்துளை கிணற்றை, குழந்தையின் தந்தையான சோட்டேலால் என்பவர் தோண்டிக் கொண்டிருந்தபோது, கிணற்றில் தவறி விழுந்ததாகவும், ஆழ்துளை கிணற்றில் போட்ட கயிற்றை பற்றிக் கொண்ட குழந்தை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்து வருவதாக, சம்பவத்தை நேரில் கண்ட உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார்.

ஜூன் 11 ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்தேக் கிராமத்தில், 50 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது ஆண் குழந்தை மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.