ETV Bharat / bharat

விசாகப்பட்டினம் கிழக்கு கடற்படை தளத்துக்கு இந்திய கடற்படைத் தலைவர் வருகை

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தலைவர் அட்மிரல் ஆர்.ஹரி குமார், இரண்டு நாள் பயணமாக விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தளத்துக்கு (ENC) சென்று, அங்குள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய கடற்படைத் தளபதி
இந்திய கடற்படைத் தளபதி
author img

By

Published : Feb 3, 2022, 4:15 PM IST

விசாகப்பட்டினம்: முதல் முறையாக இந்திய கடற்படைத் தலைவர் (Chief of the Naval Staff & Admiral) அட்மிரல் ஆர்.ஹரி குமார் விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தளத்துக்கு இரண்டு நாள் பயணமாக பிப்.1ஆம் தேதியன்று வருகை தந்தார்.

அவரை ஐஎன்எஸ் (INS) டெகாவில் கிழக்கு கடற்படை தளகர்த்தாவும், Flag Officer Commanding-in-Chief (FOC-in-C) கொடி அலுவலருமான VAdm பிஸ்வாஜித் தாஸ்குப்தா, வரவேற்று மரியாதை செய்தார்.

அட்மிரல் ஆர்.ஹரி குமார் வருகை

அப்போது இருவரும் உடன் கிழக்கு கடற்படை கட்டளையின் தற்போதைய பிரச்னைகள் குறித்து கலந்துரையாடினர். கிழக்கு கடற்படை தளம் (Eastern Naval Command - ENC) குறித்த செயல்பாடுகள் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் பற்றிய மேலோட்டமான தகவல்கள் பற்றி அவருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், கிழக்கு கடற்படை தளத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.

குறிப்பாக, இம்மாதத்தின் இறுதியில் விசாகப்பட்டினத்தில் திட்டமிடப்பட்டுள்ள குடியரசுத்தலைவரின் கடற்படை ஆய்வு (PFR) மற்றும் MILAN என்ற பன்னாட்டு கடற்படை பயிற்சிக்கான ஆயத்தம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அட்மிரல் ஆர்.ஹரிக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆய்வு

கிழக்கு கடற்படையின் உயர் அலுவலர்களுடன் சேர்ந்து கப்பல்களில் இறங்கி, ஆயுதத் துப்பாக்கிச் சூடு மற்றும் சிறப்புப் படை நடவடிக்கைகளை உள்ளடக்கிய கடற்படையின் செயல்பாட்டுத் தயார்நிலையை, இந்திய கடற்படைத்தலைவர் மதிப்பாய்வு செய்தார்.

இதன்தொடர்ச்சியாக அப்போது அட்மிரல் ஆர்.ஹரி, தலைமைத் தளபதி (Commander in Chief - C-in-C) யின் போர் கப்பல்களில் நடந்த துப்பாக்கிச் சூடு ஒத்திகை மற்றும் சிறப்புப் பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகளை திறனாய்வு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, கடற்படை கப்பல் தளத்தில் உள்ள முக்கிய செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு வசதிகளைப் பார்வையிட்டார்.

மாலுமிகளுடன் உரையாடல்

பின்னர், அவர் கிழக்கு கடற்படை தளத்தில் உள்ள அலுவலர்கள் மற்றும் மாலுமிகளுடன் உரையாடினார். இந்திய கடற்படையின் முக்கிய மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (Humanitarian Assistance and Disaster Relief - HADR) பிரிவின் இயக்குநர், இன்ஸ் காரியல் கப்பலில் (INS Gharial) சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட (Portable container) எளிதில் மாற்றக்கூடிய கண்டெய்னரில் ஏற்படுத்தப்பட்டிருந்த மருத்துவ வசதி குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.

அட்மிரல் தனது பயணத்தின் போது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (Defence Research and Development Organisation - DRDO) இணைந்து இந்திய கடற்படையின் வளர்ச்சித் திட்டங்களை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து, கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தை (Naval Science and Technological Laboratory - NSTL) பார்வையிட்டார்.

மேலும் அவர், விசாகப்பட்டினத்தில் சங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தார்.

இதையும் படிங்க: இந்தியக் கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக பொறுப்பேற்ற அட்மிரல் ஆர். ஹரி குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.