ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், ஜாஞ்ச்கிர் சம்பா மாவட்டம், பிஹ்ரித் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் சாஹூ (12) சிறுவன் ஜூன் 10ஆம் தேதி வீட்டின் அருகே இருந்த ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்தான். 120 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில், சிறுவன் 50 அடியில் சிக்கியிருப்பதாக மீட்புக்குழு தெரிவித்தது.
சிறுவனை மீட்கும் பணியில், தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுக்களுடன், தீயணைப்பு துறை, காவல் துறை, சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. இந்த பணிகள் 5 நாளாக தொடர்ந்துவருகிறது. சிறுவனுக்கு குழாய்கள் மூலம் உணவு, தண்ணீர், ஆக்சிஜன் வழங்கப்பட்டுவருகிறது. அதோடு சிறுவன் சுயநினைவுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே ஜேசிபி எந்திரங்கள் மூலம் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் குழு தோண்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று (ஜூன் 14) சிறுவன் இருக்கும் இடத்திற்கு சில அடி தூரம் வரை குழி தோண்டப்பட்டதாகவும், சில மணி நேரங்களில் சிறுவன் மீட்கப்படுவான் என்றும் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
இந்த பணிகள் அனைத்தையும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அவ்வப்போது நேரடியாக சம்பவயிடத்தில் இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கு வீடியோ கால் செய்து பணியை பார்வையிட்டுவருகிறார்.
இதையும் படிங்க: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் - 3ஆவது நாளாக மீட்புப்பணிகள் தீவிரம்!