ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர் சம்பா மாவட்டம் பிஹ்ரித் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ராகுல் சாஹூ (12). இந்த சிறுவன் ஜுன் 10ஆம் தேதி வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.
சிறுவனின் அழுகையை கேட்ட குடும்பத்தார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் போலீசார் தீயணைப்புத்துறை, மாநில பேரிடர் மீட்புக் குழுவினருடன் சம்பவயிடத்திற்கு விரைந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
முதல்கட்ட தகவலில் ஆழ்துளை கிணறு சுமார் 120 அடி ஆழம் கொண்டது என்றும் குழந்தை 60 அடி ஆழத்தில் சிக்கி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள்களாக ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. சிறுவன் சுயநினைவுடன் இருப்பதாகவும், உணவு, தண்ணீர் குழாய்கள் மூலம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதோடு குழாய் வழியாக ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று (ஜூன் 13) குஜராத்திலிருந்து மீட்பு ரோபோ வரவழைக்கப்பட்டுள்ளது. சிறுவன் விரைவில் மீட்கப்படுவார் என்று மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உ.பி. வன்முறையில் ஈடுபட்டவர் வீட்டில் இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல்