ETV Bharat / bharat

வெள்ளத்தால் உருவான தீவு: இன்னல்களுக்கு மத்தியில் விவசாயம் செய்யும் தண்பாரா விவசாயிகள்

author img

By

Published : Dec 7, 2020, 6:18 PM IST

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தில் ஹஸ்தீயோ நதியின் குறுக்கே குவிந்த மணல் பரப்பு தீவுபோல உருவானது. நதிக்கரையோரம் வசித்த தண்பாரா மக்கள் அதனை விவசாய நிலமாக சீரமைத்தனர். அதுவரை குடிநீர் ஆதாரமாக இருந்த அந்த நதி, குறுக்கே இருந்த மணல் பரப்பால் நாளடைவில் விளைநிலமாகவும் உருவெடுத்தது. இப்படித்தான் தீவுக்குள் விவசாயம் செய்யும் முறையை தண்பாராவாசிகள் நடைமுறைப்படுத்தினர்.

தண்பாரா
தண்பாரா

சத்தீஸ்கர்: கோர்பா மாவட்டத்தில் அமைந்துள்ள தண்பாரா (Dandpara) கிராமத்தில் பிற கிராமங்களைப் போல அல்லாமல் சிக்கலான முறையில் விவசாயம் செய்யப்படுகிறது. ஹஸ்தீயோ நதிக்கரையோரம் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில், இக்கிராமவாசிகளுக்கு ஹஸ்தீயா நதிதான் முன்னொரு காலத்தில் குடிநீர் ஆதாரமாக இருந்திருக்கிறது. சுமார் 80 குடும்பங்கள் வசித்துவரும் இக்கிராமத்தில் விவசாயம், மீன்பிடித் தொழில்தான் பிரதானம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தில் நதியின் குறுக்கே குவிந்த மணல் பரப்பு தீவுபோல உருவாகியது. அதுவரை நதியை குடிநீர் ஆதாரமாகப் பயன்படுத்திய மக்கள், அதன் பின்னர் புதிய தீவில் விவசாயம் செய்யத் திட்டமிட்டனர். முதலில் நிலத்தைச் சமன்செய்தனர். அந்தப் புதிய நிலப்பரப்பை விவசாயத்திற்காக முழுக்கச் சீரமைத்து பயிரிட்டனர்.

இது தொடர்பாக அவ்வூர் வாசிகளிடம் ஈடிவி பாரத் கேட்கையில், ”அந்தத் துண்டு நிலத்தைச் சீரமைப்பது அவ்வளவு எளிதாக இல்லை. அந்தத் தீவு மட்டும் இல்லாதிருந்தால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும்" எனத் தெரிவித்தனர்.

இந்தக் கிராமத்தினர் விவசாயிகளாக மட்டும் இல்லாமல் மீனவர்களாகவும் இருப்பதால் படகு செலுத்தி தீவிற்குச் சென்று விவசாயம் செய்வது எளிதாக உள்ளது.

சாதாரண நிலம்போல இத்தீவில் இருப்பது எளிதல்ல. இங்கு விளையும் பொருள்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வழியில் பலமுறை படகு நதியில் கவிழ்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட தருணங்கள் நேராமல் இருக்க பயிரைப் படகில் ஏற்றுவதில் தொடங்கி படகுகளை கவனமாகச் செலுத்துவது மிக முக்கியம். தீவில் நெல் பயிரிட்டு வணிகம் செய்வது எளிதல்ல எனத் தெரிவிக்கும் இப்பகுதியினர், தங்களின் வீட்டில் தானிய இருப்பை உறுதி செய்யவே விவசாயம் செய்கின்றனர்.

ஒருவேளை பயிர்கள் நதியில் அடித்துச் செல்லப்பட்டால் அதற்கு எவ்வித நிவாரணமும் அரசாங்கம் வழங்குவதில்லையாம். இது தொடர்பாக விவசாயி ஒருவர், ”மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு சத்தீஸ்கர் மாநில அரசு ஆதரவளிக்கிறது. ஆனால் சொந்த மண்ணில் இன்னல்களுக்கு நடுவே விவசாயத்தில் ஈடுபடும் எங்களைக் குறித்து அரசுக்குத் தெரியாது. தீவில் விவசாயம் செய்யும் எங்களின் துயரில் அது பங்கெடுப்பதுமில்லை” என்கிறார்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.