டெல்லி: சத்தீஸ்கர் மாநில நிலக்கரி வரி ஊழல் வழக்கில் முதலமைச்சர் பூபேஷ் பகேலின் துணைச் செயலாளர் சௌமியா சௌரசியா, ஐஏஎஸ் அலுவலர் சமீர் விஷ்னோய் உள்பட பலரது வீட்டுமனைகள், நகைகள், நிலக்கரி சுத்திகரிப்பு எந்திரங்கள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டன. இந்த வழக்கில் நேற்று(டிச.9) மேலும் 91 அசையும் மற்றும் அசையா சொத்துக்களை இணைக்கப்பட்டுள்ளது.
புதிதாக இணைக்கப்பட்ட மொத்த சொத்துக்களின் மதிப்பு சுமார் 152.31 கோடி ரூபாய் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த சொத்துக்கள் இன்று(டிசம்பர் 10) முடக்கப்பட்டன. அதில் 65 வகையான சொத்துக்கள் முக்கிய குற்றவாளியான சூர்யகாந்த் டிவாரியுடையது, 21 சொத்துக்கள் முதலமைச்சரின் துணைச் செயலாளர் சௌமியா சௌரசியா உடையது மற்றும் 5 சொத்துக்கள் ஐஏஎஸ் அலுவலர் சமீர் விஷ்னோயுடையது என்றும் இதில் பணம், நகைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், நிலக்கரி சுத்திகரிப்பு எந்திரங்களும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மற்றொரு தொழிலதிபரான லக்ஷ்மிகாந்த் திவாரி (சூர்யகாந்த் திவாரியின் மாமா) தவிர நால்வரும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பணமோசடி வழக்கு வருமான வரித்துறை புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இது மூத்த அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் இடைத்தரகர்கள் அடங்கிய ஒரு கார்டெல் மூலம் சத்தீஸ்கரில் இருந்து கடத்தப்படும் ஒவ்வொரு டன் நிலக்கரிக்கும் சட்டவிரோதமாக ரூ. 25 வசூலிக்கப்படும் அள்விற்கான ஒரு பெரிய ஊழலாக இருக்ககூடும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காஷ்மீரில் பயங்கரவாதிக்கு சொந்தமான வீடி இடிப்பு