திருவனந்தபுரம் (கேரளா): (Cheating case against PT Usha): முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா மீது IPC 420 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் தடகள வீராங்கனை ஜெம்மாஜோசப் அளித்தப் புகாரின் அடிப்படையில் இந்த வழக்கானது பதியப்பட்டுள்ளது.
தாமதம் ஆக்கப்பட்ட பத்திரப்பதிவு
இந்தப் புகாரில் பி.டி.உஷா தன்னை மோசடி செய்ததாகக் கூறியுள்ளார். ஜெம்மாஜோசப் கோழிக்கூட்டில் உள்ள கட்டட அலுவலர்களிடமிருந்து 1,012 சதுர அடி உள்ள ஒரு வீட்டை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.46 லட்சமாகும்.
இந்தத் தொகையினை தவணை முறையில் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் பத்திரம் இன்னும் இவரின் பெயருக்கு மாற்றப்படாமல் உள்ளதாகத் தெரிவித்தார். பதிவை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகவும் கூறினார்.
இந்த வீட்டை பி.டி.உஷா உத்தரவு அளித்ததால், நம்பிக்கையுடன் வாங்கியதாகக் கூறியுள்ளார். இதனால், பொய்யான உத்தரவாதம் அளித்து தன்னை ஏமாற்றியதாக பி.டி. உஷா மீது ஜெம்மா ஜோசப் புகார் அளித்துள்ளார்.
ஏழு பேர் மீது வழக்கு
கோழிக்கூடு மாவட்ட உயர் அலுவலர் ஏவி ஜார்ஜ், இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து வெல்லாயில் போலீசார் பி.டி.உஷா மற்றும் அக்கட்டட நிறுவனத்தில் உள்ள ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:ஏழை மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்டும் விஜய்?