ETV Bharat / bharat

டெல்லியில் ஏமாற்றம்... பணமின்றி 1,200 கிமீ தண்டவாளத்தில் நடந்த முதியவர்! - டெல்லி டூ ஜார்க்கண்ட்

ராஞ்சி: டெல்லியில் வேலைக்காகச் சென்ற முதியவர், பணம் இல்லாததால் 1200 கிமீ நடந்தே வீட்டிற்குத் திரும்பிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Barjom Bamda
பார்ஜோம் பாம்டா
author img

By

Published : Mar 12, 2021, 2:43 PM IST

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியைச் சேர்ந்தவர் பார்ஜோம் பாம்டா பஹாடியா. முதியவரான இவரை, தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று, டெல்லிக்கு வேலைக்காக அழைத்துச் சென்றுள்ளது. அவரிடமிருந்து பணத்தை அபகரித்துக்கொண்ட நிறுவன ஊழியர்கள், வேலை தற்போது இல்லை என கூறியுள்ளனர்.

இதனால் பணமின்றி தவித்த முதியவர், ரயில்வே தண்டவாளப்பாதையில் சொந்த ஊர் நோக்கி கிளம்பினார்.

சாப்பிட உணவு இன்றி தவித்த அவர், தண்ணீர் குடித்து பசியை தீர்த்துள்ளார். சுமார் 5 மாதங்களில் 1,200 கிமீ தூரத்தை நடந்தபடியே கடந்த முதியவருக்கு, அவ்வழியே வந்தவர்களிடம் இருந்து உதவி கிடைத்துள்ளது.

பணமின்றி 1,200 கிமீ தண்டவாளத்தில் நடந்த முதியவர்

அவருக்கு சாப்பிட உணவு வழங்கியது மட்டுமின்றி, சொந்த ஊருக்குச் செல்ல பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். சுமார் 15 முதல் 20 நாள்கள் வரை, சாப்பிட உணவின்றி தவித்த முதியவர், தண்ணீர் மட்டுமே குடித்து வந்தது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: 'இதுவெறும் ட்ரெய்லர்தான்' - முகேஷ் அம்பானிக்கு குறுஞ்செய்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.