ETV Bharat / bharat

அத்துமீறி பொதுக் கூட்டம் - சந்திரபாபு நாயுடுவின் கார் பறிமுதல்;பேருந்தின் மீது ஏறி பிரசாரம் - ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி

குப்பம் தொகுதியில் ஊர்வலம் செல்ல இருந்த தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை தடுத்து நிறுத்திய போலீசார், அவரது காரை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் சாலையில் நின்ற தனியார் பேருந்தின் மீது ஏறி சந்திரபாபு நாயுடு தொண்டர்களிடையே உரையாற்றினார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு
author img

By

Published : Jan 6, 2023, 10:45 PM IST

அமராவதி: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் குண்டூர் மற்றும் நெல்லூர் பொதுக் கூட்டங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏறத்தாழ 11 பேர் உயிரிழந்தனர். இது அம்மாநிலத்தின் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பொதுக் கூட்டங்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டி அரசு தடை விதித்தது.

இந்நிலையில், குப்பம் தொகுதியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சந்திரபாபு நாயுடு காரில் வந்தார். குடுபள்ளி அருகே சந்திரபாபு நாயுடுவின் காரை வழிமறித்த போலீசார், பொதுக் கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடை ஆணையை சந்திரபாபு நாயுடுவிடம் வழங்கினர்.

போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு, மேற்கொண்டு நகர முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சந்திரபாபு நாயுடுவின் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் கோபமடைந்த அவர் அருகில் இருந்த தனியார் பேருந்தின் மீது ஏறி குழுமியிருந்த மக்களிடையே பேசத் தொடங்கினார்.

போலீசார், தங்களை அடிமைகள் போல் நடத்துவதாகவும், ஆட்சி மாறி அதிகாரம் வந்தவுடன் போலீசாருக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். மேலும் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதித்த முதலமைச்சர் ஜெகன் மோகன் கடந்த செவ்வாய்க்கிழமை ராஜமுந்திரியில் பிரமாண்ட ஊர்வலம் நடத்தியதாகவும் கூறினார்.

ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஒரு சட்டம், சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் வகுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய சந்திரபாபு நாயுடு, ஜனநாயகத்தில் அராஜகத்திற்கு இடமில்லை என்பதை ஜெகன்மோகன் ரெட்டி நினைவில் கொள்ளுமாறு தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ.10 செலுத்தினால் 3ஆண்டுகளுக்கு பாதுகாப்பு வாராண்டி - கட்சித் தலைவரின் பகீர் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.