ETV Bharat / bharat

சிறையில் இருந்து வெளியே வந்தார் சந்திரபாபு நாயுடு.. 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன்! - அனைத்து மாநிலச் செய்திகள்

Chandrababu naidu gets interim bail: திறன் மேம்பாட்டு ஊழல் புகாரில் சிறையில் உள்ள ஆந்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Chandra babu naidu gets interim bail in skill development case
சிறையிலிருந்து வெளியே வந்தார்... ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 11:19 AM IST

Updated : Oct 31, 2023, 5:33 PM IST

ராஜமகேந்திரவரம்: திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திரப் பிரதேசம் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி இன்று (அக்.31) ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ராஜமகேந்திரவரம் மத்தியச் சிறையிலிருந்த சந்திரபாபு நாயுடு நீதிமன்ற நடைமுறைகள் அனைத்து முடித்து தற்போது சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். அவருக்குத் தெலுங்கு தேசம் கட்சியைச் சார்ந்தவர் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

  • #WATCH | Supporters of former Andhra Pradesh CM and TDP Chief N Chandrababu Naidu surround him as he walks out of Rajahmundry jail.

    Andhra Pradesh High Court granted him interim bail in the Skill Development Scam Case today. pic.twitter.com/Yw31roGMcw

    — ANI (@ANI) October 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் தெலுங்கு தேசிய கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு செப்டம்பர் 9ஆம் தேதி சிஐடி காவல்துறையினர் கைது செய்யப்பட்டார். 2015ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியில் ரூ.300 கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தரப்பில் விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மற்றும் வீட்டு காவலில் வைப்பது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்குச் சிறையிலிருந்து சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதினார். அதில், சிறையில் இருக்கும் தனக்கும், வெளியில் இருக்கும் தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும், அதனால் ராஜமகேந்திரவரம் மத்திய சிறைக்கு உள்ளேயும், சிறைக்கு வெளியேயும் Z பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஜாமீன் வழங்க கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இந்த மனு இன்று ஆந்திர உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சந்திரபாபு நாயுடு தரப்பில், 50 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும், மேலும் வலது கண்ணில் சிகிச்கை அளிக்க வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது மேலும் நவம்பர் 28ஆம் தேதி மீண்டும் சரண் அடைய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி குண்டர் சட்டத்தில் கைது? உயர்நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல்!

Last Updated : Oct 31, 2023, 5:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.