மாநில அரசுகளுக்கான கோவிட்-19 தடுப்பூசி விநியோகம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ”பல்வேறு மாநில அரசுகளுக்கு இதுவரை 21 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதில் சுமார் 19 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டு கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநில அரசுகளில் கையிருப்பில் உள்ளன.
மேலும், அடுத்த மூன்று நாள்களில் சுமார் 26 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படும். கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கியப் பங்காற்றுவதால், நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம், மே மாதத்தில் தொடங்கப்பட்டது.
உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 50 விழுக்காட்டிற்கு மேலான எண்ணிக்கையை மத்திய அரசு கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக விநியோகம் செய்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசித் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (மே.20) தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: கேரள முதலமைச்சரை பாராட்டிய மோடி; மாநிலங்கள் தடுப்பூசி வீணாவதைத் தவிர்க்க அறிவுறுத்தல்