உலக நாடுகளை புதுவகை உருமாறிய ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்திவரும் நிலையில், பாதிப்பை சந்தித்துவரும் ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் பாரத் போயட்டெக், சீராம் இந்தியா ஆகிய நிறுவங்கள் தடுப்பூசிகளை தயாரித்துவருகின்றன. இந்த இரு நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட சுமார் இரண்டரைக் கோடி தடுப்பூசிகள் ஆப்ரிக்க நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதியவகை ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ளும் விதமாக மலாவி, எத்தியோப்பியா, சாம்பியா, மொசாம்பிக், லிசோதா, கினியா ஆகிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க இந்தியா முடிவெடுத்துள்ளது. இதை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துகள், பிபிஇ உபகரணங்கள், கையுறைகள், வென்டிலேட்டர்கள் போன்ற முக்கிய பொருள்களையும் ஏற்றுமதி செய்ய தயார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை தென்னாப்ரிக்கா, போட்ஸ்வானா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி, ஹாங்க் காங், இத்தாலி, பெல்ஜியம், இஸ்ரேல், டென்மார்க், ஆஸ்திரியா, செக் ரிபளிக், ஆஸ்திரேலியா, கனடா,போர்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இந்த உருமாறிய ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது.
இதையும் படிங்க: புதிய தொற்றை எதிர்கொள்ள தொலைநோக்குத் திட்டம் - உலக சுகாதார அமைப்பு