டெல்லி: இதுகுறித்து மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே கூறுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டது. இதனிடையே மத்திய அரசு சமையல் எண்ணெய் விலையை குறைக்கும் நடவடிக்கையாக சுங்க வரி நீக்கியுள்ளது.
அதன்படி, அத்தியாவசிய தேவையான பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் இறக்குமதி மீதான 2.5% சுங்கவரி நீக்கப்பட்டுள்ளது. இதனால், சமையல் எண்ணெய் விலை பல இடங்களில் 20, 18, 10 மற்றும் 7 ரூபாய் அளவுக்கு குறைக்கபடும்" எனத் தெரிவித்தார். கடந்த 2020ஆம் ஆண்டு 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட சமையல் எண்ணெய், இந்தாண்டு ரூ.180 வரை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சமையல் எண்ணெய் விலை குறையும் - ஒன்றிய அரசின் அதிரடி நடவடிக்கை