ETV Bharat / bharat

படித்த பெண்கள் லிவிங் டுகெதரில் இருக்கக்கூடாது - மத்திய இணை அமைச்சர் கருத்து

நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கில் மத்திய இணை அமைச்சர் கவுசல் கிஷோர், ‘ஷ்ரத்தா போன்ற படித்த பெண்கள் லிவிங் டுகெதர் உறவில் ஈடுபடக்கூடாது எனவும், இதன் காரணமாகத்தான் பல பிரச்னைகள் வருவதாகவும்’ கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharatபடித்த பெண்கள் லிவிங்கில் இருக்க கூடாது - டெல்லி கொலை வழக்கில் அமைச்சர் சர்ச்சை கருத்து

author img

By

Published : Nov 18, 2022, 4:42 PM IST

டெல்லி: டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் லிவிங்டுகெதர் காதலனால் கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா குறித்து மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

டெல்லியில் சமீபத்தில் லிவிங் டுகெதர் காதலியைக்கொன்று 35 துண்டுகளாக வெட்டி வீசி எறிந்த காதலன் அஃப்தாப் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அஃப்தாபிற்குத் தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் பல தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் கவுஷல் கிஷோர், ஷ்ரத்தா வால்கர் கொல்லப்பட்டதற்கு, 'படித்த பெண்கள் லிவ்-இன் உறவுகளில் ஈடுபடக்கூடாது' எனத் தெரிவித்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். படித்த பெண்கள் அவர்களது வாழ்க்கையில் பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும்; லிவிங் டுகெதர் உறவில் இருக்கக்கூடாது எனவும் வலியுறுத்தினார். இவரின் கருத்துக்கு பல கட்சியைச் சேர்ந்தவர்களும், பெண்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

  • Women Parliamentarians: 14%
    Are shouldering the responsibility of speaking up abt heinous crimes against women (in the 14% exclude WCD Min&most BJP women MPs,who speak basis of political convenience)
    When will the men do some heavy lifting on this issue, besides mere lip service? https://t.co/QQE3e5ZTMk

    — Priyanka Chaturvedi🇮🇳 (@priyankac19) November 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இவரின் கருத்துக்கு சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டரில், "நல்லவேளை, பெண்கள் இந்த நாட்டில் பிறந்ததுதான் குற்றம் என கவுசல் கூறவில்லை. வெட்கமில்லாமல், இதயமில்லாமல், குரூர எண்ணத்துடன் அனைத்து பிரச்னைக்கும் பெண்கள் தான் காரணம் எனக் கூறுவது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

  • Surprised he didn’t say girls are responsible for being born into this nation. Shameless, heartless and cruel, blame-the-woman-for-all problems mentality continues to thrive. https://t.co/ILYGHjwsMX

பிரதமர் மோடி உண்மையிலேயே பெண்கள் முன்னேற்றத்தின் மீது அக்கறை கொண்டவர் என்றால், மத்திய அமைச்சர் கவுஷலை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஷ்ரத்தா கொலை வழக்கு - அஃப்தாபுக்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.