ETV Bharat / bharat

'தட்டுகளைத் தட்டுங்கள், விளக்கை ஏற்றுங்கள் என்பது வெற்று யோசனை' - தட்டுகளைத் தட்டுங்கள், விளக்கை ஏற்றுங்கள் என்பது வெற்று யோசனை

கரோனா தொற்றின் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதை மறுத்து மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

Central govt fails to take precautionary measures of covid 19 saids congress mp p.chidambaram

author img

By

Published : Apr 5, 2021, 10:29 AM IST

சென்னை: அதிக அளவிலான கரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் இந்தியாவில் படிப்படியாக குறையத் தொடங்கிய கரோனா வைரஸ், திடீரென்று அதிகரித்து மக்களை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகிறது.

கடந்த சில வாரங்களாக தொற்றின் வீரியம் அதிகரிக்கத் தொடங்கியதன் விளைவாக உலக அளவில் கரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்திற்குச் சென்றுள்ளது. இந்தியாவில் அதிகப்படியான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவுவது குறித்து பலரும் தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தொற்று பரவும் நேரத்தில் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் சூழல் மிகவும் முக்கியமானது. தகுந்த இடைவெளி, முகக் கவசங்கள் அணிதல், தனிமனித சுகாதாரம் போன்றவை மிகவும் முக்கியமானதாக உள்ள நேரத்தில், தேர்தல் அறிவிக்கப்பட்டதே கரோனா பரவலுக்கு முக்கியக் காரணம் எனப் பலரும் தெரிவிக்கின்றனர். ஏனெனில் பொதுக்கூட்டம், வாக்கு சேகரிப்பு ஆகிய சமயங்களில் பெரும்பாலான மக்கள் மத்திய, மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றத் தவறிவிடுகின்றனர். இது அவர்களைத் தாண்டி பிறரையும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது.

இதற்கிடையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான ப.சிதம்பரம், நாட்டில் கரோனா வைரஸின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் தடுப்பூசிகள் பயன்தரவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "கரோனா தொற்று இந்தியாவுக்குள் நுழையும் என்று தெரிந்த பிறகும் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கத் தவறியது.

கரோனா தொற்று பரவலை 21 நாள்களில் நிறுத்தி வெற்றி காண்பேன் என்று பிரதமர் மோடி பேசியதை நாடு மறக்கவில்லை. தட்டுகளைத் தட்டுங்கள், அகல் விளக்கை ஏற்றுங்கள் என்ற வெற்று யோசனைகளச் சொல்லியதையும் மக்கள் மறக்கவில்லை.

Central govt fails to take precautionary measures of covid 19 saids congress mp p.chidambaram
எம்பி ப.சிதம்பரம் ட்வீட்

தொற்றின் பரவல் குறைந்த நேரத்தில் தடுப்பு ஊசி இயக்கத்தை விரைவுபடுத்தாமல் பொன்னான காலத்தை மத்திய அரசு விரயமாக்கியது. தொற்றின் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதை மறுத்து, மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. தடுப்பூசி இயக்கம் நொண்டி நடக்கும் காட்சி நமக்கு கவலையளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.