ETV Bharat / bharat

'இலங்கையிடம் பேசி சிறைப்பிடிக்கப்பட்ட 14 மீனவர்கள், படகுகள் மீட்பு'

புதுச்சேரி: இலங்கை அரசிடம் பேசி சிறைப்பிடிக்கப்பட்ட 14 மீனவர்கள், அவர்களின் படகுகள்   மீட்கப்பட்டது என மத்திய மீன்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று (மார்ச் 27) தெரிவித்துள்ளார்.

மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்

author img

By

Published : Mar 27, 2021, 10:06 PM IST

மத்திய மீன்வளத் துறை கிரிராஜ் சிங் இன்று (மார்ச் 27) பாஜக கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது,

"காரைக்கால் சென்றோம். அங்கு மீனவ மக்கள் அளித்த கோரிக்கையைக் கேட்டறிந்து பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும், நேற்று (மார்ச் 26) காரைக்காலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 14 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அரசிடம் பேசி, அவர்களின் படகுகள் மீட்கப்பட்டுள்ளனர். விரைவில் மீனவர்கள் விடுவிக்கப்படுவர்.

கரோனா காலத்தில் வெளிநாட்டிலிருந்த குடிபெயர்ந்த மக்கள் 4.36 லட்சம் பேர் மத்திய அரசால் மீட்கப்பட்டனர். இதில், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளில் சிக்கியிருந்த 1,600 மீனவர்கள் மீட்கப்பட்டனர். 313 படகுகளும் மீட்கப்பட்டன.

புதுச்சேரி முழுவதும் மீனவ கிராமத்தில், மீனவர்கள் அந்தந்தக் கிராமப்புறத்தின் வளர்ச்சியை மேம்படுத்த அவர்களில் 40 திட்ட பொறுப்பாளர் அமைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதுச்சேரி மாநிலம் மீனவர்களுக்கு 3,500 விசைப்படகுகள் வழங்கப்படும்.

மீனவர்கள் பிரச்சினை எதுவாக இருந்தால், என் கவனத்துக்குக் கொண்டுவாருங்கள், அதனைச் சரிசெய்யப்படும்" என்றார். பேட்டியின்போது மத்திய இணையமைச்சர் அர்ஜுன் ராம்மேக்வாலும் உடனிருந்தார்.

இதையும் படிங்க: 'சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு: அமைச்சருக்கு நன்றி தெரிவித்த தமிழிசை!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.