இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதியான பிபின் லஷ்மன் சிங் ராவத் (பிபின் ராவத்) 1958ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி பிறந்தார்.
தனது இளமைக்கால கல்வியை உத்தரகாண்டில் உள்ள இந்து ஹர்வாலி ராஜ்புத் பள்ளியில் பயின்றார். இந்திய ராணுவ அலுவலர் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். தொடர்ந்து ராணுவத்தில் முனைவர் பட்டம் வரை பெற்றுள்ளார்.
பபின் ராவத் 1978ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி கோர்க்கா ரைபிள்ஸின் 5ஆவது பட்டாலியன் பிரிவில் நியமிக்கப்பட்டார்.உயர் மட்ட அளவிலான போர்களில் அதிக அனுபம் கொண்ட ராவத் கிளர்ச்சி மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் 10 ஆண்டுகளை செலவிட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் மேஜராக பணிபுரிந்தார். ஒரு கர்னலாக, அவர் கிபித்துவில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக கிழக்குத் துறையில் 5ஆவது பட்டாலியன் 11 கோர்க்கா ரைபிள்ஸ் என்ற தனது பட்டாலியனுக்குக் கட்டளையிட்டார்.
பிரிகேடியர் பதவிக்கு உயர்த்தப்பட்ட அவர், சோபோரில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸின் 5 பிரிவுகளுக்கு தலைமை தாங்கினார்.
மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற பிறகு, ராவத் 19ஆவது காலாட்படை பிரிவின் (உரி) தளபதியாக பொறுப்பேற்றார். ஒரு லெப்டினன்ட் ஜெனரலாக, அவர் புனேவில் உள்ள தெற்கு இராணுவத்தை எடுத்துக்கொள்வதற்கு முன்பு திமாபூரில் தலைமையகமாக இருந்த III கார்ப்ஸ்க்கு கட்டளையிடும் அலுவலராக நியமிக்கப்பட்டார்.
ராணுவ தளபதியாக பதவி உயர்வு பெற்ற பிறகு, ராவத் 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று தெற்கு தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். சிறிது காலத்திற்குப் பிறகு, 2016 செப்டம்பர் 1ஆம் தேதி ராணுவ துணைத் தளபதி பதவியை ஏற்றார்.
தொடர்ந்து, ராணுவத்தின் 27ஆவது தலைமை அலுவலராக நியமிக்கப்பட்டார். பீல்ட் மார்ஷல், சாம் மானெக்ஷா மற்றும் ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் ஆகியோருக்குப் பிறகு, கோர்க்கா படைப்பிரிவைச் சேர்ந்த மூன்றாவது அதிகாரி இவர்.
நேபாள ராணுவத்தின் கெளரவ ஜெனரலும் இவர் ஆவார். இந்திய மற்றும் நேபாள ராணுவங்களுக்கு இடையே, அவர்களின் நெருங்கிய மற்றும் சிறப்புமிக்க ராணுவ உறவுகளை குறிக்கும் வகையில், பரஸ்பர தலைவர்களுக்கு கெளரவ ஜெனரல் பதவியை வழங்குவது பாரம்பரியமாக இருந்து வருகிறது.
இந்தப் பதவியை வகித்தவரும் பிபின் ராவத் ஆவார்.
2015 மியான்மர் தாக்குதல்
ஜூன் 2015 இல், மணிப்பூரில் மேற்கு தென்கிழக்கு ஆசியாவின் ஐக்கிய விடுதலை முன்னணி (UNLFW) பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். இந்திய இராணுவம் இந்த எல்லை தாண்டிய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது. அப்போது, பாராசூட் ரெஜிமென்ட்டின் 21ஆவது பட்டாலியனின் பிரிவுகள் மியான்மரில் உள்ள NSCN-K தளத்தைத் தாக்கின. ராவத்தின் கட்டளையின்படி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
சீனாவுக்கு எதிரான தாக்குதல்
1962ஆம் ஆண்டு போருக்கு பின்னர் சீனா 1987ஆம் ஆண்டு மீண்டும் வாலாட்டியது. இந்தத் தாக்குதலை திறம்பட கையாண்டவர் பிபின் ராவத்.
பயணம் செய்த நாடுகள்
பிபின் ராவத் 2017ஆம் ஆண்டு நேபாளம், வங்க தேசம், பூடான், மியான்மர், கஜகஸ்தான், துர்மெனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கும் 2018ஆம் ஆண்டு நேபாளம், இலங்கை, ரஷ்யா, வியட்நாம், தான்சானியா, கென்யா, உள்ளிட்ட நாடுகளுக்கு பயணித்தார்.
தொடர்ந்து 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 நாள்கள் பயணமாக அமெரிக்கா சென்றார். அப்போது அந்நாட்டின் ராணுவ தலைமை தளபதியை சந்தித்து உரையாடினார்.
இவர் கடைசியாக 2019ஆம் ஆண்டு செப்.30ஆம் தேதி முதல் அக்.3ஆம் தேதி வரை மாலதீவுக்கு ராணுவ பயணம் மேற்கொண்டார்.
இவர் முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்ற நிலையில் சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து சீனா பயோ போரில் ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டினார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : IAF MI 17 V5: விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் முக்கிய அம்சங்கள்!