புதுச்சேரி: புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட எல்லையம்மன் கோயில் வீதியில் வசித்து வரும் வேலு, லட்சுமி தம்பதியினருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (டிச.20) பிற்பகலில், லட்சுமி தனது மூன்று மகன்களையும் பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது பாதர் சாகிப் வீதியில் சென்று கொண்டிருந்த போது பாதாள சாக்கடையை மூடி வைத்து மூடாமல், சாக்குப்பை போட்டு மறைத்து வைத்திருந்ததை கவனிக்காத, சிறுவன் சாக்கடையில் தவறி விழுந்தான். இதைக் கண்ட சகோதரர்கள் மற்றும் தாய், சற்றும் தாமதிக்காமல் சிறுவனை உடனடியாக மீட்டனர். இதனால் நடைபெறவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் வேதனை அடைந்த மாணவனின் தாய், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை அறிந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, பாதாள சாக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்று கூறியதை அடுத்து பொதுப்பணித்துறையினர் பாதாள சாக்கடையை மூடினர்.
இதனிடையே திமுக சட்டமன்ற உறுப்பினர் அணி பால் கென்னடி நேரில் வந்து பார்வையிட்டார். இதனால் அதிமுகவின் அன்பழகன் அணி பால் கென்னடி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமாக காணப்பட்டது. பள்ளி மாணவன் பாதாள சாக்கடையில் விழும் சிசிடிவி காட்சிகள், தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் அங்கீகாரமின்றி பல பள்ளிகள் செயல்பட்டு வருகிறது - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!