டெல்லி: அண்மையில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் எனவும்; தேர்வு முடிவுகள் வெளியாகும் லிங்கும் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
இதனையடுத்து தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியும், அதற்கான லிங்கும் போலியானது என சிபிஎஸ்சி தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும், 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்தும் பரவி வரும் செய்தியில் உண்மையில்லை எனவும் சிபிஎஸ்சி வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ இணையதளத்தை நம்புங்கள்
தேர்வு முடிவுகள் குறித்து வெளியாகும் செய்திகளை சிபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே மாணவர்கள் தெரிந்துகொள்ள அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக அண்மையில் சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் மாணவர்களின் மதிப்பெண்கள் குறித்து மதிப்பிடவும் புதிய மதிப்பீட்டுக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வரும் 31ஆம் தேதி வெளியாகும் எனவும், 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:காமராசர் பல்கலைக்கழக கட்டண உத்தரவு ரத்து