ETV Bharat / bharat

சிபிஎஸ்இ மதிப்பெண் பட்டியல் குறித்து அலுவலர்களுக்கு சிபிஎஸ்இ திடீர் கடிதம்! - cbse letter

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பெண்கள் குறித்த ஆவணங்களை, வரும் ஜீலை12ஆம் தேதி மாலைக்குள் அனுப்ப வேண்டுமென இந்தியா முழுவதும் உள்ள மண்டல இயக்குனர்களுக்கு சிபிஎஸ்இ கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ
author img

By

Published : Jul 6, 2021, 9:44 PM IST

சென்னை: கரோனா காரணமாக சிபிஎஸ்இ 10ஆம், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, அவர்களுக்கான மதிப்பெண்கள் அளிக்கப்படும் முறையை சிபிஎஸ்இ அறிவித்தது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களில் 30 விழுக்காடு, 11ஆம் வகுப்பு தேர்வில் இருந்து 30 விழுக்காடு, 12ஆம் வகுப்பு பாடங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் இருந்து 40 விழுக்காடு என்று எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு மதிப்பெண்

அதேபோல், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு, மாதிரித் தேர்வு, அரையாண்டு தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படவேண்டும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இந்தியா முழுவதும் உள்ள மண்டல இயக்குனர்களுக்கு சிபிஎஸ்இ கடிதம் அனுப்பியுள்ளது.

சிபிஎஸ்இ உத்தரவு

அதில், "அனைத்து வகை சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 10ஆம்,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பெண்கள் முறைகளை திடீரென்று நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். மதிப்பெண்கள் குறித்த ஆவணங்களை 12ஆம் தேதி மாலைக்குள் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் 12ஆம் தேதி மதிப்பெண்கள் குறித்த ஆவணங்களை பெற்றதும், அதற்கு அடுத்த பத்து தினங்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரேநாளில் 3,479 பேருக்கு கரோனா உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.