கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பள்ளி மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றுவரும் நிலையில், 10,12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்வும், ஆனால் தேர்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இருக்காது எனவும் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்கள் தங்களது பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்விற்கான மாதிரி தேர்வுகளை ஆன்-லைன் மூலம் நடத்திவந்தன.
இதனிடையே, சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் மாணவர்களுடன் உரையாடிய ரமேஷ் பொக்ரியால், சிபிஎஸ்இ பள்ளிகள் பல கிராமப்புறங்களில் இருப்பதால் ஆன்லைனில் தேர்வுகள் நடத்த சாத்தியமில்லை எனத் தெரிவித்தார். மேலும், 2021 சிபிஎஸ்இ போர்டு தேர்வுகள் அனைத்தும் எழுத்து வடிவத்தில்தான் இருக்குமே தவிர ஆன்லைன் தேர்வுகள் கிடையாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்ற குழுப்பம் மாணவர்கள், ஆசிரியர் மத்தியில் எழுந்துவந்த நிலையில், இதுதொடர்பாக மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட் செய்துள்ளார்.
அதில், 2021ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 72ஆவது மன் கி பாத்: மோடி இன்று உரையாற்றுகிறார்