ETV Bharat / bharat

அரசே நாத்திகத்தை ஊக்குவிக்க முடியுமா? - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாட்டில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையில் பொறிக்கப்பட்டுள்ள ‘ கடவுள் இல்லை’ என்ற வாசகத்தை அகற்றக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharatஅரசே நாத்திகத்தை ஊக்குவிக்க முடியுமா? - தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

author img

By

Published : Sep 13, 2022, 12:38 PM IST

டெல்லி: பெரியாரின் சிலை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. இந்த சிலைகளில் ‘ கடவுள் இல்லை’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த வார்த்தை கடவுள் நம்பிக்கை உடையவர்களை புண்படுத்துவதாகவும், அதனை அகற்றக் கோரியும் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் தெய்வநாயகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனைத் தொடர்ந்து தெய்வநாயகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அவர் தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவில், "தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு கீழ் கடவுள் இல்லை என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. கடவுள் மறுப்பு வாசகங்கள், பெரும்பாலான மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், இந்தியாவின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும் இதற்கு அரசும் உதவி புரிகிறது. இந்த வாசகத்தை நீக்க உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பான விசாரணை நேற்று (செப்-12) நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு மற்றும் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி எஸ்கே கவுல் ஒத்திவைத்தார். இது போல கடவுள் மறுப்பை அரசு ஆதரிக்க முடியுமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க:பெரியார் சிலை விவகாரம்... கனல் கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.