ETV Bharat / bharat

கோதுமை ஏற்றுமதி கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கோதுமை அல்லது கோதுமை மாவுக்கான ஏற்றுமதிக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கோதுமை ஏற்றுமதிக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்

author img

By

Published : Aug 25, 2022, 6:12 PM IST

டெல்லி: இதுகுறித்து மத்திய அமைச்சரவைக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோதுமை அல்லது கோதுமை மாவுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகள்/தடையிலிருந்து விலக்கு அளிக்கும் கொள்கை திருத்த முன்மொழிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று (ஆக 25) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்புதல், கோதுமை மாவு ஏற்றுமதிக்கான கட்டுப்பாட்டை அனுமதிக்கும். இது கோதுமை மாவின் அதிகரிக்கும் விலை உயர்வை கட்டுப்படுத்தும். குறிப்பாக நாட்டின் நலிந்த பிரிவினரின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும். முன்னதாக கோதுமை மாவு ஏற்றுமதி மீது எந்தவித தடையோ, கட்டுப்பாடோ விதிக்கக் கூடாது என்ற கொள்கை இருந்தது.

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், கோதுமை மாவின் விலையேற்றத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும், கோதுமை மாவு ஏற்றுமதி மீதான தடை மற்றும் கட்டுப்பாடுகளிலிருந்து விதி விலக்கை திரும்பப் பெறவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதிக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பான விரிவான அறிக்கை வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்தால் விரைவில் வெளியிடும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சொத்துக்காக எலி மருந்து கொடுத்து தாயைக் கொன்ற இளம்பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.