ETV Bharat / bharat

ஆறு மாநிலங்களில் நாளை நடைபெறவுள்ள இடைத்தேர்தல்..!

author img

By

Published : Nov 2, 2022, 11:04 PM IST

இந்தியாவிலுள்ள ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு தொகுதிகளில் நாளை(நவ.3) இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஆறு மாநிலங்களில் நாளை நடைபெறவுள்ள இடைத் தேர்தல்..!

இடைத்தேர்தல்களில் வெற்றிபெறுவது சட்டப்பேரவையில் எந்தவித மாற்றத்தையும் பெரிதாகத் தந்துவிடாது எனினும், ஆளும் பாஜகவை எதிர்த்து வழுவாக போட்டியிட முனைந்து வருகிறது, ஏனைய எதிர்கட்சிகள். நாளை(நவ.3) ஆறு மாநிலங்களிலுள்ள ஏழு தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நவ.6ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தெலங்கானா மாநிலத்திலுள்ள முனுகோடே, மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அந்தேரி(கிழக்கு), ஹரியானா மாநிலத்திலுள்ள அடம்பூர், உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள கோரா கோரக்நாத், ஒடிசா மாநிலத்திலுள்ள தாம்நகர், பிகாரிலுள்ள மோகாமா மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இந்த ஏழு தொகுதிகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலா இரண்டு தொகுதிகளை தற்போது கைவசம் வைத்துள்ளன. மீதமுள்ள மூன்று தொகுதிகளை, பிஜு ஜனதா தளம், சிவ சேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தற்போது கைவசம் வைத்துள்ளன. மேலும், நாளை நடைபெறவுள்ள இடைத்தேர்தல் குறித்த விரிவான பார்வை கீழ்வருமாறு,

மகாராஷ்டிரா: அந்தேரி(கிழக்கு)

அந்தேரி தொகுதியில் சிவசேனா கட்சி சார்பாக மறைந்த எம்எல்ஏ ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிடவுள்ளார். இதனால் இம்முறை பாஜகவை சுலபமாக தோற்கடிக்க வாய்ப்புள்ளதாகப் பல கணிப்புகள் கூறியுள்ளது. மேலும், அப்படி கணிப்புகளின்படியே நடந்தால் அது சமீபத்தில் நடந்த சிவசேனா பிரிவினைக்கு பிறகு, அவர்களுக்கு கிடைக்கும் முதல் வெற்றியாகும்.

தெலங்கானா: முனுகோடே

இந்தத் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த கோமதி ராஜ்கோபால் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததையடுத்து, இந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற நேரிட்டது. சமீபத்தில் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவால் தொடங்கப்பட்ட பாரத் ராஷ்டிரிய சமிதிக்கு முதல் வெற்றி தற்போது அவசியமாக உள்ளதால், கடும்போட்டி நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பிகார்: மொகமா, கோபால்கஞ்ச்

பிகாரிலுள்ள இந்த இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பாஜக கூட்டணியை விட்டு விலகி ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்த நிதிஷ்குமாருக்கு மிக முக்கியமானது. ஆகையால், நிதிஷின் ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனந்த் குமார் சிங்கின் மனைவி நீலம் தேவிக்கும் பாஜக சர்பாக போட்டியிடும் சோனம் தேவிக்கும் இடையே கடும் போட்டியை எதிர்பார்க்கலாம்.

உத்தரப்பிரதேசம்: கோலாகோகர்நாத்

இந்தத் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் கிரியின் மறைவிற்குப்பிறகு இங்கு இடைத் தேர்தல் நடைபெறவேண்டியுள்ளது. இந்தத் தொகுதியை பொருத்தமட்டில் பாஜகவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே தான் நேரடிப்போட்டி. ஏற்கெனவே பாஜகவிற்கு இங்கு ஒரு அனுதாப அலை இருந்தாலும், கடும் போட்டியை வெளிப்படுத்த 40 நட்சத்திரப்பேச்சாளர்களை வைத்தும், கேபினேட் அமைச்சர்களை வைத்தும், பாஜகவின் முக்கியப்பிரமுகர்களை வைத்தும் அக்கட்சி பிரசாரம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஆறு மாநிலங்களிலும் கடுமையான போட்டி நிலவ வாய்ப்புள்ளதால், நாளை(நவ.3) நடைபெறவுள்ள தேர்தல் குறித்து மக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க:தாய்க்கு நீதி வாங்கித் தர தானே சட்டம் படித்து தாயின் வழக்கறிஞரான மகன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.