பெதுல் (மத்தியப் பிரதேசம்): கரோனா தொற்றின் மூன்றாவது அலை தற்போது நாடு முழுவதும் பரவி வருவதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் விதமாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒரு தனித்துவமான வழியை கண்டுபிடித்துள்ளார்.
பெதுல் மாவட்டத்தில், பைன்ஸ்தேஹியின் தொலைதூர பழங்குடிப் பகுதியில், ஒரு கிராமத்தில் உள்ள பள்ளியின் தலைமை வாசகரான கமலா தவண்டே, காளை வண்டியில் நடமாடும் நூலகத்தை அமைத்துள்ளார்.
இவர் வீடுவீடாகச் சென்று, ஏழை மாணவர்களுக்கு புத்தகங்களை விநியோகிக்கிறார். ஆன்லைன் வகுப்புகளை அணுக வழியில்லாமல், பாரம்பரியமான மொஹல்லா அல்லது வானொலி விரிவுரைகளை இன்னும் நம்பியிருக்கும் இந்த கிராமத்திலுள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடது என நோக்கில் இவர் இவ்வாறு செய்துள்ளார். இவரது சேவையை, பெற்றோர்கள், கிராம மக்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இந்த யோசனை குறித்து கமலா கூறுகையில், “கிராமத்தில் நான் கற்பிக்கும் பள்ளியில் 87 குழந்தைகளும், மூன்று ஆசிரியர்களும் உள்ளனர். அதில் ஆசிரியர் ஒருவர் கண்காணிபாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் நான் மட்டுமே எஞ்சியிருக்கிறேன்.
குழந்தைகளுக்கு கல்வி மிகவும் அவசியம். அவர்களுக்கு புத்தகங்களை விநியோகிப்பதும் அவசியம். அதனால், எல்லாப் புத்தகங்களையும் மாட்டு வண்டியில் வைத்து, வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்தேன். மாட்டு வண்டி நூலகம் தவிர, மொஹல்லா வகுப்புகளும் வெவ்வேறு வீடுகளில் நடத்தப்படுகின்றன” என்றார்.