மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தான சம்ருதி நெடுஞ்சாலையில் இன்று கோர விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுமானப் பணிக்காக இரும்புக் கம்பிகளுடன் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி, சிந்த்கேத் ராஜா என்ற பகுதியில் விபத்துக்குள்ளானது.
வாகனத்தில் இருந்த இரும்பு கம்பிகள் விழுந்து 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். சாலை வளைவில் வாகனம் திரும்பும் போது கட்டுப்பாடு இழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்டத் தகவல் தெரிவிக்கின்றது.
இதையும் படிங்க: சோம்நாத் ஸ்ரீ சிவபார்வதி கோயிலுக்கு பிரதமர் அடிக்கல்