ETV Bharat / bharat

வேலைவாய்ப்பை உருவாக்க மூலதன செலவினம் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு - நிர்மலா சீதாராமன்

மூலதன செலவினம் 37.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, ரூ.7.28 லட்சம் கோடியிலிருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
author img

By

Published : Feb 1, 2023, 4:47 PM IST

டெல்லி: நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "நாட்டில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக மூலதன செலவினம் 37.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, ரூ.7.28 லட்சம் கோடியிலிருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாகும். 2019-20ஆம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட மூலதன செலவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

இதில் நாட்டில் வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு, சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ரயில்வே, பாதுகாப்பு போன்ற செலவினங்களும் அடங்கும். அடுத்த 25 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு, முதலீடு, புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்தும். மாநிலங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக, 2022-23ஆம் நிதியாண்டில் நிதிக்கூட்டாட்சி முறையில், மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டு, 1.3 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும். இது சென்ற நிதியாண்டை விட, 30 சதவீதம் அதிகம். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதமாகும்.

வருவாய் செலவினத்தை பொறுத்தவரை 1.20 சதவீதம் அதிகரித்து, 35.02 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. வட்டி, மானியங்கள், அரசு ஊழியர்களின் ஊதியம், பாதுகாப்பு செலவுகள் மற்றும் நித்தி ஆயோக் மானியங்கள், மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் ஆகியவற்றிற்கு மாநிலங்களுக்கு வழங்கப்படும். மத்திய தன்னாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள் ஆகியவையும் இதில் அடங்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Union Budget 2023 : ரயில்வே துறைக்கு ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.