மலப்புரம், (கேரளா): சமீப காலத்தில் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீர் பள்ளங்கள் குறித்த போராட்டங்கள் கேரள மாநிலமெங்கும் நடந்து வருகிறது. இந்நிலையில், மணக்கோலத்தில் ஓர் மணமகள் சேதமடைந்த சாலையில் தேங்கி நிற்கும், மழை நீர் அருகே வெட்டிங் ஃபோட்டோ சூட் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.
இந்தப்புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் 'arrow_wedding company' என்ற முகப்பில் பதிவிடப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டத்திலுள்ள போக்கொட்டும்படம் எனும் ஊரில் இந்த வெட்டிங் ஃபோட்டோ சூட் நடந்தேறியுள்ளது.
இன்ஸ்டாவில் நெட்டிசன்களால் வைரால் ஆக்கப்பட்டு வரும் இந்த ஃபோட்டோ சூட் தற்போது வரை 6.4 மில்லியன் பார்வைகளைக்கடந்தும் 393ஆயிரம் லைக்குகளையும் இதுவரை இணையத்தில் பெற்றுள்ளது.
சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீர் பள்ளங்களால் ஏற்படும் விபத்துகள் குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. மேலும், 'அரசு நடவடிக்கை எடுக்கும் முன், இன்னும் எத்தனை பேர் தான் மடிவது..?' எனக் கடுமையாகக் கேள்வியும் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காகிதத் தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து...3 பேர் உயிரிழப்பு