டெல்லி: மத்திய அரசின் பொதுத் துறை பெட்ரோலிய நிறுவனம் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம் எனப்படும் ஓ.என்.ஜி.சி. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நிரந்திர தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் இன்றி இயங்கி வருகிறது. இயக்குனர்கள் குழுவை சேர்ந்த ராஜேஷ் குமார் ஸ்ரீவட்சவா, தற்காலிக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் அவர் ஓய்வு பெற உள்ள நிலையில், அடுத்த தலைவரை தேர்வும் செய்யும் பணி முடுக்கி விடப்பட்டது.
தலைவரை தேர்வு செய்யும் கமிட்டி அமைக்கப்பட்ட நிலையில், 9 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தும் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் (பி.பி.சி.எல்.) முன்னாள் தலைவர் அருண் குமார் சிங், தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ஓ.என்.ஜி.சி தலைவராக அருண்குமார் சிங் தேர்வு செய்யப்பட்டால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் அப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவன தலைவர்களை தேர்வு செய்வதற்கான வயது வரம்பை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தளர்த்திய நிலையில், அருண்குமார் சிங் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள்... - பைடன் ஷாக்..!