சிம்லா: பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக் கழக மாணவிகளின் குளியல் வீடியோ இணையத்தில் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ வெளியானதையடுத்து மாணவிகள் தற்கொலைக்கு முயன்றனர். பல்கலைக்கழகத்தில் போராட்டமும் நடைபெற்றது.
இந்த சம்பவத்தில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் சக மாணவியே, 60-க்கும் மேற்பட்ட மாணவிகளின் குளியல் வீடியோவை எடுத்தது தெரியவந்தது. வழக்கில், வீடியோ எடுத்த மாணவி, சிம்லாவில் இருந்த அவரது காதலன் சன்னி மேத்தா மற்றும் அவரது நண்பர் ரங்கஜ் வர்மா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மூவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கைதான மாணவியின் செல்போனில், கைதான மாணவர்களுடனான உரையாடல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன்படி, மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுக்கும்படி கைதான சன்னி வற்புறுத்தியதாகவும், அதன் காரணமாகவே மாணவி வீடியோ எடுத்ததார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மாணவியின் செல்போனில் மோஹித் என்ற மற்றொரு இளைஞரின் உரையாடலும் கிடைத்துள்ளதாகவும், அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாணவிகளின் குளியல் வீடியோ வெளியான வழக்கு - சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு!