தெலங்கானா: அம்பேர்பெட் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது தாத்தாவின் மொபைல் ஃபோனில், ஃப்ரீ ஃபயர் கேம் (Free Fire) பதிவிறக்கம் செய்து விளையாடியுள்ளார். இந்த விளையாட்டினை ஆன்லைனில் விளையாடிய சிறுவன் முதலில் 1500 ரூபாய் கட்டணம் செலுத்தி விளையாடியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஒரு முறைக்கு 10 ஆயிரம் வீதம், 60 முறை பணம் செலுத்தி விளையாடியுள்ளார். இதனை பயண் படுத்திக்கொண்ட ஆப் ஊழியர்கள், 2 லட்சம், 1.95 லட்சம், 1.60 லட்சம் 1.45 லட்சம் ரூபாய் என லட்சக் கணக்கில் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
சிறுவனின்தாத்தா, ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர். அவர் தனது தேவைக்காக பணம் எடுக்க செல்லும் போது தான், இந்த கொள்ளை சம்பவம் தெரிய வந்துள்ளது. பின்னர் அவர் சைபர் கிரைம் காவல் துறையினரிடம் இது குறித்து புகார் அளித்தார். புகாரையடுத்து சைபர் கிரைம் காவல் துறையினர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.