மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஹன்சாபூரியைச் சேர்ந்த வயதான தம்பதி, உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். அதில், தனது மகன் எங்களை கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு துரத்தியதால் தங்க இடமில்லாமல் தவித்துவருகிறோம். மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவதியுற்றுள்ளோம் என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கில் நாக்பூர் நீதிமன்றம், 2020ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று அளித்த தீர்ப்பில், பெற்றோரை துன்புறுத்தி துரத்திய மகன் உடனடியாக அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும். பெற்றோர் அவர்களாகவே வெளியேறும் போது மட்டுமே அந்த வீட்டிற்கு திரும்ப வர வேண்டும். இதனை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
மகன் மேல்முறையீடு: இந்த தீர்ப்பை எதிர்த்து தம்பதியின் மகன் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரோகித் டியோ கூறுகையில், "பெற்றோரை அலைகழித்த மகனை வீட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட தீர்ப்பில் தவறு ஏதுமில்லை. இந்த தீர்ப்பு சட்ட ரீதியாகவும் முறையானது. எனவே மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நடிகை ஜாக்குலின் சொத்துக்கள் முடக்கம்!