ETV Bharat / bharat

ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க ஷீரடி அறக்கட்டளைக்கு உத்தரவு

கோவிட்-19 பரவலைத் தடுக்கும் பணியில் வலு சேர்க்கும்விதமாக கோவிட்-19 பரிசோதனை மையம், ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க ஷீரடி அறக்கட்டளைக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Bombay HC
Bombay HC
author img

By

Published : Apr 24, 2021, 4:43 PM IST

மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் கோவிட்-19 பாதிப்பைக் கருத்தில்கொண்டு அம்மாநில உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கோவிட்-19 பாதிப்பு தொடர்பான பொதுநல மனு ஒன்று நீதிபதிகள் கங்கா புர்வாலா, குல்கர்னி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அதை விசாரித்த நீதிபதிகள், கோவிட்-19 சூழல் மோசமாக உள்ளதைக் கருத்தில்கொண்டு அம்மாநிலத்தில் பிரசித்திப்பெற்ற ஷீரடி சாய்பாபா கோயில் அறக்கட்டளை புதிய பரிசோதனை மையம், ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளது.

மாநிலம் போர்க்கால அடிப்படையில் தவித்துவருவதால் கோயில் நிர்வாகம் விரைந்து இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க: கொளுத்தும் வெயிலில் 180 கி.மீ. பயணம்: கரோனா காலத்தில் கடமை தவறாத பெண் மருத்துவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.