அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நேற்று (செப். 12) ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது செப்டம்பர் 16ஆம் தேதி வெடிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் தலைமை ஆசிரியர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அந்த தகவலின் அடிப்படையில் அமிர்தசரஸ் போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் பள்ளிக்கு விரைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது தெரியவந்தது. அதன்பின் மெசேஜ் வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், அந்த எண் அதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரது தந்தை உடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின் அவரை கைது செய்து விசாரித்தில், அவரது மகன் செப்டம்பர் 16ஆம் தேதி நடக்க உள்ள கணித தேர்விற்கு பயந்து, அதை ரத்து செய்யும் நோக்குடன் அந்த மெசேஜை அனுப்பியது தெரியவந்ததுள்ளது. கடந்த 7ஆம் தேதி அமிர்தசரஸில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளி வெடிகுண்டு மிரட்டல் வந்ததும், அதே பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தெலங்கானாவில் பெரும் தீ விபத்து... 8 பேர் உயிரிழப்பு... பிரதமர் நிவாரணம் அறிவிப்பு...