நவ்சாரி (குஜராத்): குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (டிச 1) காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் மத்தியில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், நேற்று (நவ 30) இரவு நவ்சாரியின் வன்ஸ்டா தொகுதி பாஜக வேட்பாளார் பியூஷ் படேல், பிரதாப் நகரில் இருந்து வொண்டர்வேலாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பியூஷ் படேலின் கார் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் காரின் கண்ணாடி உடைந்ததில் பியூஷ் படேலுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதற்கு வன்ஸ்டா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளார் அனந்த் படேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள்தான் காரணம் என பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: குஜராத் தேர்தல்: பிரியும் வாக்கு வங்கி.. ஓர் அலசல்!