ETV Bharat / bharat

களமிறக்கப்பட்ட எம்பி, அமைச்சர்கள்..! பாஜகவின் யுக்தி கை கொடுத்ததா..? - பாஜக தேர்தல் யுக்தி

BJP star candidates: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என மூன்று மாநிலங்களை கைப்பற்றிய பாஜகவின் சார்பில் களமிறங்கிய நட்சத்திர வேட்பாளர்களின் வெற்றி - தோல்வி விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்...

BJP star candidates status in Madhya Pradesh Rajasthan Chhattisgarh assembly elections
பாஜக நட்சத்திர வேட்பாளர்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 10:51 PM IST

Updated : Dec 4, 2023, 6:31 AM IST

ஹைதராபாத்: 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம் மாநில சட்ட சபை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. பலத்தை நிரூபிக்க பாஜகவும், காங்கிரசும் பல்வேறு வியூகங்களை வகுத்தன.

அதிலும் பாஜக பெரும் அக்கினி பரீட்சையை நடத்தியது. நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அமைச்சர்களையும் இந்த சட்ட மன்ற தேர்தலில் பாஜக களம் இறக்கியது. நட்சத்திர வேட்பாளர்களாகக் களம் இறங்கிய இவர்களில் பெரும்பாலோனோர் வெற்றியைச் சுவைத்தாலும் சிலர் எதிர்பாராத வகையில், அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போலத் தோல்வி அடைந்துள்ளனர். பாஜகவின் வியூகத்தில் களமிறக்கப்பட்ட நட்சத்திர வேட்பாளர்களின் வெற்றி - தோல்வி விவரங்கள் பின்வருமாறு,

மத்திய பிரதேசம்:

  • திமானி (Dimani) தொகுதியில் போட்டியிட்ட மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (Narendra Singh Tomar) 24ஆயிரத்து 461 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  • நரசிங்பூர் (Narsingpur) தொகுதியில் போட்டியிட்ட டாமோ தொகுதி எம்பியும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் பிரகலாத் சிங் படேல் (Prahlad Singh Patel) 31ஆயிரத்து 310 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  • நிவாஸ் (Niwas) தொகுதியில் போட்டியிட்ட ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே (Faggan Singh Kulaste), காங்கிரஸ் வேட்பாளர் செயின்சிங் வர்கடே (Chainsingh Warkade) விடம் 9 ஆயிரத்து 723 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
  • ஜபல்பூர் பாசிம் (Jabalpur Paschim) தொகுதியில் போட்டியிட்ட எம்பி ராகேஷ் சிங் (Rakesh Singh) 30 ஆயிரத்து 134 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  • கதர்வரா (Gadarwara) தொகுதியில் போட்டியிட்ட எம்பி உதய் பிரதாப் சிங் (Uday Pratap Singh) 56 ஆயிரத்து 529 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  • சட்னா (Satna) தொகுதியில் போட்டியிட்ட எம்பி கணேஷ் சிங் (ganesh singh) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்தார்த் சுக்லால் குஷ்வாஹாவிடம் (Siddharth Sukhlal Kushwaha) 4 ஆயிரத்து 41 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
  • சித்தி (Sidhi) தொகுதியில் போட்டியிட்ட எம்பி ரித்தி பதக் (Riti Pathak) 35 ஆயிரத்து 418 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ராஜஸ்தான்:

  • ஜோத்வாரா (Jhotwara) தொகுதியில் போட்டியிட்ட எம்பி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (Rajyavardhan Singh Rathore) 50 ஆயிரத்து 167 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  • வித்யாதர் நகர் (Vidhyadhar Nagar) தொகுதியில் போட்டியிட்ட எம்பி தியா குமாரி (Diya Kumari) 71 ஆயிரத்து 368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  • சவாய் மாதோபூர் (Sawai Madhopur) தொகுதியில் போட்டியிட்ட ராஜ்ய சபா உறுப்பினர் கிரோடி லால் மீனா (Kirodi Lal Meena) 22 ஆயிரத்து 510 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  • திஜாரா (Tijara) தொகுதியில் போட்டியிட்ட எம்பி மஹந்த் பாலக்நாத் (mahant balaknath) 6 ஆயிரத்து 173 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ராஜஸ்தானில் ஆட்சியை பாஜக கைப்பற்றி இருக்கும் நிலையில் இவரே முதலமைச்சராக முன்மொழியப்படுவார் எனக் கூறப்படுகிறது.
  • மாண்டவா (Mandawa) தொகுதியில் போட்டியிட்ட எம்பி நரேந்திர குமார் (Narendra Kumar) 18 ஆயிரத்து 717 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் குமாரி ரீட்டா சவுத்ரியிடம் (Kumari Rita Chaudhary) தோல்வி அடைந்துள்ளார்.
  • கிஷன்கர் (Kishangarh) தொகுதியில் போட்டியிட்ட எம்பி பகீரத் சௌத்ரியை விட (Bhagirath Choudhary) 46 ஆயிரத்து 111 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விகாஷ் சௌத்ரி (vikash choudhary) வெற்றி பெற்றுள்ளார். மேலும், பகீரத் சௌத்ரியை விட சுயேட்சை வேட்பாளர் சுரேஷ் தக் (suresh tak) 42 ஆயிரத்து 491 வாக்குகள் அதிகம் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
  • சாஞ்சோர் (Sanchore) தொகுதியில் போட்டியிட்ட எம்பி தேவ்ஜி படேல் (Devji Patel) 30 ஆயிரத்து 535 வாக்குகள் பெற்று சுயேட்சை வேட்பாளரை விட 64 ஆயிரத்து 983 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் ஜீவா ராம் சௌத்ரியிடம் (Jiva Ram Choudhary) தோல்வி அடைந்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சுக்ராம் பிஷ்னோய் (Sukhram Bishnoi) 90 ஆயிரத்து 847 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

சத்தீஸ்கர்:

  • படன் (Patan) தொகுதியில் போட்டியிட்ட எம்பி விஜய் பாகேல் (Vijay Baghel) காங்கிரஸ் வேட்பாளர் பூபேஷ் பாகேலிடம் (Bhupesh Baghel) விட 19 ஆயிரத்து 723 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
  • பரத்பூர்-சோன்ஹாட் (Bharatpur-Sonhat) தொகுதியில் போட்டியிட்ட பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சர் ரேணுகா சிங் சருதா (Renuka Singh Saruta) 4 ஆயிரத்து 919 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  • பதல்கான் (Pathalgaon) தொகுதியில் போட்டியிட்ட எம்பி கோமதி சாய் (Gomati Sai) 255 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: ரேவந்த் ரெட்டி, கே.சி.ஆரை தோற்கடித்த பாஜக வேட்பாளர்..! யார் இந்த வெங்கட ரமண ரெட்டி!

Last Updated : Dec 4, 2023, 6:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.