ETV Bharat / bharat

முதலமைச்சரின் நிலைபாடுதான் எங்களது நிலைபாடு - நிர்மல் குமார் சுராணா - முதலமைச்சரின் நிலைபாடு

புதுச்சேரி மாநில அந்தஸ்து தொடர்பாக முதலமைச்சரின் நிலைபாடே தங்கள் நிலைபாடு என பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுராணா தெரிவித்துள்ளார்.

surana
surana
author img

By

Published : Sep 23, 2021, 10:36 AM IST

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளராக பதவி வகித்து வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான செல்வகணபதி மாநிலங்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனையடுத்து பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுராணா புதுச்சேரியில் கூட்டணி கட்சி தலைவரான முதலமைச்சர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நிர்மல் குமார் சுராணா கூறுகையில், "ராஜ்யசபா தேர்தலில் முதன்முறையாக போட்டியிடுகிறோம். என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். பிரதமர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

surana
முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்த நிர்மல் குமார் சுராணா

உள்ளாட்சி தேர்தலிலும் எங்கள் கூட்டணி இருக்கும். இறுதி வரை தொடர வேண்டும் என்பது எங்கள் நோக்கம். மாநில அந்தஸ்து தொடர்பாக முதலமைச்சரின் நிலைபாடுதான் எங்களது நிலைபாடு. அவரது முடிவிற்கு நாங்கள் துணைநிற்போம்" என்றார்.

இதையும் படிங்க: புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தல்: போட்டியின்றித் தேர்வாகும் செல்வகணபதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.