பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மகாதேவபுரா தொகுதி பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலியின் மகள் ரேணுகா நேற்று (ஜூன் 9) தனது நண்பருடன் சொகுசு காரில் செல்லும்போது கேபிடல் ஹோட்டல் சிக்னலில் நிற்காமல் சென்றுள்ளார்.
இதனால் அவரது காரை போக்குவரத்து காவலர்கள் விரட்டி பிடித்து நிறுத்தினர். அப்போது ரேணுகா காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதோடு எம்எல்ஏ மகள் என்று கூறி மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
இருப்பினும் காவலர்கள் அபராதம் செலுத்தும்படி வலியுறுத்தினர். இதையடுத்து ரேணுகா அபராதம் செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகவே, எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலி "எனது மகள் யாரையாவது புண்படும்படி பேசியிருந்தால், மன்னிப்பு கோருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பழங்குடியின மக்கள் வளர்ச்சியில் காங்கிரஸ் ஆர்வம் காட்டவில்லை