ETV Bharat / bharat

சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு? தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்! - சோனியா காந்தி

கர்நாடகாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த நினைப்பதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Sonia Gandhi
Sonia Gandhi
author img

By

Published : May 8, 2023, 7:38 PM IST

பெங்களூரு : காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாகவும் அவர் மீது வழக்குப் பதிய உத்தரவிடுமாறும் தேர்தல் ஆணையத்திடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

224 தொகுதிகளை கர்நாடக சட்டமன்றத்திற்கு வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் கடைசி கட்ட அதிதீவிர பிரசாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டன. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாகத் தேர்தல் ஆணையத்திடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (மே. 6) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சோனியா காந்தி, "கர்நாடகத்தின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த நினைக்கும் யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது"எனக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சோனியா காந்தியின் கருத்து நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளனர். தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் ஒன்றுமில்லை என்றும்; மோடிக்கு எதிரான பிரசாரத்திற்காக இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், சோனியா காந்தியின் கருத்து தேச விரோதச் செயல் என்றும்; தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

சோனியா காந்தியின் இந்த கருத்து மக்களை பிளவுபடுத்தும் வகையிலும், வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இருவருக்கும் இடையே பிளவை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறினார். இந்தியாவின் ஒரு பகுதியே கர்நாடகம் என்றும்; நாட்டை விட்டு கர்நாடகாவை பிரிக்க காங்கிரஸ் திட்டமிடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதன் காரணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப் பதிய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றார். இதனிடையே சோனியா காந்தி தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

  • #WATCH | A BJP delegation meets Election Commission (EC) in Delhi

    She (Sonia Gandhi) deliberately used the word sovereignty. Congress manifesto is the agenda of the 'Tukde-Tukde' gang and hence they are using such words. We hope EC will take action against this anti-national… pic.twitter.com/7S4dScJHF4

    — ANI (@ANI) May 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பெங்களூருவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் இந்தியாவில் இருந்து கர்நாடகாவை பிரிக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினர். மேலும், காங்கிரஸ் கட்சியின் இந்த முயற்சிக்கு வரும் மே 10ஆம் தேதி கர்நாடக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதையும் படிங்க : "இந்தியாவில் இருந்து கர்நாடகாவை பிரிக்க காங்கிரஸ் முயற்சி" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.