ஹிசார்: ஹரியானா மாநில நடிகையும், பாஜக பிரமுகருமான சோனாலி போகத் ஆகஸ்ட் 23ஆம் தேதி கோவாவில் உயிரிழந்தார். முதலில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று கூறப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.
அவரது உடற்கூறு ஆய்விலும் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டன. இந்த கொலை வழக்கு தொடர்பாக போகத் உடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சுதிர் சங்வான் மற்றும் சுக்விந்தர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறுது. அதில் சோனாலி போகத் போதைப்பொருள் உட்கொண்டது தெரியவந்துள்ளது. இதனிடையே போகத்தின் உடல் அவரது சொந்த ஊரான ஹரியானா மாநிலம் ஹிசாருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். இன்று(ஆகஸ்ட் 26) மாலை அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு