மீரட்: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் பாஜக பிரமுகர் ஶ்ரீகாந்த் தியாகி, குடியிருப்பு வளாகத்தில் பெண் ஒருவரை அநாகரீகமாக பேசி மிரட்டும் வீடியோ அண்மையில் வெளியானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, ஏராளமானோர் ஶ்ரீகாந்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. வீடியோவில் காணப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பொதுவான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து ஶ்ரீகாந்த் தியாகி, அங்கு வசிப்பவர்களுடன் பிரச்சினை செய்து வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து அவரது ஆக்கிரமிப்புகளை அகற்றி நொய்டா மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஶ்ரீகாந்த்தை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது நண்பர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:அடுக்குமாடி குடியிருப்பில் பாஜக பிரமுகரின் ஆக்கிரமிப்புகள் அகற்றம்