தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இத்தொற்றுக்கு இளைஞர்களும் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என, ஒரு பக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவரும் சூழலில், தடுப்பூசிக்கு தட்டுப்பாடும் நிலவி வருகிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தொற்று காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் தட்டுப்பாடு காரணமாக பலர் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனையடுத்து ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்குப் போதுமான அளவில் தடுப்பூசி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளவாசிகள் மத்தியில் எழுந்த நிலையில், பலர் #BJPBETRAYINGTNPEOPLE என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.
இதையும் படிங்க: கறுப்பு பூஞ்சை பாதிப்பு: மருத்துவமனையில் 518 பேர் சிகிச்சை!