டெல்லி: தேசிய தலைநகர் பகுதி, டெல்லி, மத்திய பூங்கா, மயூர் விகார் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததாக அரசுக்குத் தகவல் அளித்தனர். இதற்கிடையில் சஞ்சய் ஏரி பகுதியில் 10 வாத்துகள் உயிரிழந்து கிடந்தன.
இதையடுத்து, விலங்கு நல அமைச்சக அலுவலர்கள் மயூர் விகார் பகுதியிலிருந்து நான்கு மாதிரிகளும், சஞ்சய் ஏரி பகுதியிலிருந்து மூன்று மாதிரி, துவாரகா பகுதியிலிருந்து ஒரு மாதிரி என மொத்தம் எட்டு மாதிரிகளை போபாலிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், சில மாதிரிகள் ஜலந்தர் பகுதியிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், போபாலிற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதில், டெல்லியிலிருந்து அனுப்பப்பட்ட மாதிரிகளில் பறவைக்காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பறவைக்காய்ச்சல் தொற்று உறுதிசெய்யப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜலந்தருக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளின் முடிவுகளுக்காக அலுவலர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: பறவைக் காய்ச்சல்: இந்தியா மற்றொரு வைரஸ் தாக்குதலாக பார்க்கிறதா?